Tuesday, December 31, 2024
Homeதகவல் அறிந்து கொள்ளுவோம்மழைக்காலத்தில் செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதது

மழைக்காலத்தில் செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதது

மழைக்காலத்தில்  செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதது 

வடகிழக்கு பருவமழை தொடங்கி நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த மழைக்காலத்தில் பொதுமக்கள் செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதது குறித்து விரிவாக காணலாம்.

செய்ய வேண்டியது 

  • மழைக்காலங்களில் குடிநீரை காய்ச்சி வடிகட்டி ஆற வைத்த பிறகே அருந்த வேண்டும்.
  • அதிகளவு காய்கறி மற்றும் பயிர் வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
  • வீட்டில் சமைத்த சூடான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும். சூப், ரசம்,பால், டீ,காபி போன்ற சூடான திரவ உணவுகளை அருந்துவது உடல் வெப்பநிலையை சீராக வைக்க உதவும்
  • முன்கூட்டியே தேவையான மருந்து பொருட்களை வாங்கி வைத்துக் கொள்வதோடு, தங்கியிருக்கும் வீட்டையும் சுத்தமாக வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • வீட்டில் உள்ள மின்விளக்குகளை கவனமுடன் கையாள்வதோடு உடைந்த மின்சாதனப் பொருட்களை உடனடியாக மாற்றுவது விபத்தை தவிர்க்க உதவும்.

செய்யக் கூடாதவை 

  • மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின் பகிர்வு பெட்டிகள் அருகே செல்வதை தவிர்க்க வேண்டும்.
  • மின்சார கம்பிகள் அறுந்து விழுந்திருந்தால் அது தொடர்பாக அருகில் இருக்கும் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
  • இடி,மின்னல் ஏற்படும்போது டிவி, கணினி, செல்போன், மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது.
  • மழையின் போது வீட்டுச் சுவரில் தண்ணீர் கசிவு ஏற்படாமல் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை கொண்டதால் மின்கம்பிகளுக்கு அருகிலுள்ள மரங்களுக்கு கீழ் நிற்க கூடாது.
  • மழை பெய்து வரும் போது தயிர், வெண்ணெய், நெய் போன்ற குளிர்ச்சியான பொருட்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
  • பழச்சாறுகளில் கிருமி தொற்று இருக்க வாய்ப்பு இருப்பதால் அவற்றையும் தவிர்ப்பது நல்லது.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments