பரமக்குடி மாதவன் நகரில் அமைந்துள்ள உச்சைனி மாகாளியம்மன் கோயில் இரண்டாம் ஆண்டு முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. இத்திருவிழா 32வது வார்டு நகரமன்ற உறுப்பினர் வடமலையான் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் அனைத்து சமூகத்தினர் கலந்து கொண்டு கும்மியடித்தல், ஒயிலாட்டம், கோலாட்டம் நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரியை சுமந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து முத்தாலம்மன் கோயில் படித்துறை வைகையாற்றில் கரைத்தனர். இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க மாநில மகளிர் அணி இணைச்செயலாளர் கீர்த்திகா முனியசாமி, நகர துணைத் தலைவர் குணா மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.


