ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி துணைக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கூடுதல் காவல்துறை இயக்குனர் டேவிட்சன் தேவஆசீர்வாதம் திடீர் ஆய்வு செய்தார். பின்பு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜீ.சந்தீஷ், பரமக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சபரிநாதன் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். முன்னதாக பரமக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்த கூடுதல் காவல் துறை இயக்குநர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதத்தினை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், பரமக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சபரிநாதன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.


