Monday, January 13, 2025
Homeசெய்திகள்பரமக்குடி வ.உ.சி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

பரமக்குடி வ.உ.சி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

பரமக்குடி வ.உ.சி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 37வது விளையாட்டு விழா, கலையரங்கம் திறப்பு விழா, பொங்கல் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு  தலைவர் இருளப்பபிள்ளை, பள்ளியின் தாளாளர் முனியாண்டிபிள்ளை ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளியின் பொருளாளர் மகேஸ்வரன்,  இணைச் செயலாளர் கோவிந்தராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினார். பள்ளியில் பிரமாண்டமாக புதிதாக கட்டப்பட்ட தெய்வத்திரு து.இந்திராணிஅம்மையார் நினைவு கலை அரங்கத்தை துரைப்பாண்டியன்பிள்ளை திறந்து வைத்தார். பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலர் சேதுராமன் ஒலிம்பிக் கொடி ஏற்றி சமாதான புறாவையும் பறக்க விட்டு விளையாட்டு போட்டியை துவக்கி,  பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கினார். இவ்விழாவில் பள்ளியின் நிர்வாகிகள் வின்சென்ட் ஜெயக்குமார், சபரி முத்துப்பிள்ளை, லோகநாதமுருகன்,   சபை நிர்வாகிகள் குமரேசன், ராமகிருஷ்ணன், பன்னீர்செல்வம், ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.பள்ளி முதல்வர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

RELATED ARTICLES

Most Popular