Wednesday, January 1, 2025
Homeஅரசியல்மிதிக்கட்டும்... நன்று மிதிக்கட்டும்; ஆந்திரா வீடியோவுக்கு உதயநிதி ரியாக்ஷன்!

மிதிக்கட்டும்… நன்று மிதிக்கட்டும்; ஆந்திரா வீடியோவுக்கு உதயநிதி ரியாக்ஷன்!

சென்னை: ‘என்னை இழிவுப்படுத்துபவர்களை பார்த்து பரிதாபம் வருகிறது’ என, துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

உதயநிதி சமூக வலைதளங்களில் சிலரால் மிதித்துத் தள்ளப்படும் புகைப்படத்தையும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: என்னை அவமானப்படுத்துவதாக நினைத்து அரசியல் முதிர்ச்சி இவ்வளவு என்று அம்பலமாகி பேசும் அயோக்கியர்களை நினைத்து வருந்துகிறேன்.

கொள்கை எதிரிகள் நம் மீது இவ்வளவு கோபம் கொள்கிறார்கள் என்றால், நான் திராவிடக் கொள்கையை எவ்வளவு நன்றாகப் பின்பற்றுகிறேன் என்பதற்கு இதையே சான்றாகப் பார்க்கிறேன்.

கொள்கை எதிரிகள் நம் மீது இவ்வளவு கோபம் கொள்கிறார்கள் என்றால், நான் திராவிடக் கொள்கையை எவ்வளவு நன்றாகப் பின்பற்றுகிறேன் என்பதற்கு இதையே சான்றாகப் பார்க்கிறேன். பிறப்பாலும் மதத்தாலும் பிரித்தாளும் கொள்கையைப் பேசி மக்களை வெல்ல முடியாத அவர்களின் விரக்தி தான் நம்முடைய வெற்றி.

அவர்கள் என் புகைப்படத்தை இன்னும் முழுமையாக மிதிக்கட்டும். அவர்களின் அழுக்கு மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. குறைந்த பட்சம் அவர்களின் பாதங்களாவது சுத்தமாக இருக்கட்டும். சகோதர சகோதரிகளே, இதைக் கண்டு கோபப்படாதீர்கள்.

இதற்கு எதிர்வினையாற்றாமல் சமத்துவப் பாதையில் அயராது பயணிப்போம். இவ்வாறு உதயநிதி கூறினார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments