Monday, January 13, 2025
Homeசெய்திகள்பரமக்குடி நகராட்சி 32 வது வார்டில் சமத்துவ பொங்கல் விழா

பரமக்குடி நகராட்சி 32 வது வார்டில் சமத்துவ பொங்கல் விழா

பரமக்குடி நகராட்சிக்கு 32 வது வார்டு மாதவன் நகரில் அ.தி.மு.க நகர் மன்ற உறுப்பினர் வடமலையான் ஏற்பாட்டில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதை ஒட்டி அனைத்து மதத்தினரும் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு செய்து பொங்கல் பண்டிகை தொடங்கப்பட்டது. பின்பு மாதவன் நகர் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கரும்பு பொங்கல் ஆகியவை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாதவன் நகர் கீழப்பள்ளிவாசல் ஜமாத் தலைவர் பஷீர் அகமது, அதிமுக நகர் செயலாளர் ஜமால், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராமுயாதவ் மற்றும் மாதவன் நகர் மக்கள் நலச் சங்க நிர்வாகிகள் நேதாஜி குரூப்ஸ் 32 வது வார்டு பொதுமக்கள் கலந்து கொண்டனர். பின்பு நகர் மன்ற உறுப்பினர் வடமலையான் பேசுகையில், 32 வது வார்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தொய்வின்றி தொடர்ந்து செய்து கொடுக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மாதவன் நகரில் பொங்கல் விழா எனது ஏற்பாட்டில் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகிறது. இப்பகுதி மக்களுக்கு நான் அயராது உழைக்க கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு கூறினார். பின்பு மாதவன் நகர் பகுதி மக்களும் நேதாஜி இளைஞர் மன்றத்தினரும் நகர மன்ற உறுப்பினர் வடமலையானுக்கு மலர் மாலை   பொன்னாடையும் அணிவித்து கௌரவித்தனர்.

RELATED ARTICLES

Most Popular