விநாயகர் சதுர்த்தியன்று 16 நாமங்கள் கொண்ட இந்த எளிய ஸ்லோகம் சொன்னால் நன்மை உண்டாகும் என்கிறார் காஞ்சி மஹாபெரியவர். இதோ அந்த ஸ்லோகம்.
ஸுமுகச்ச ஏகதந்தச்ச கபிலோ கஜகர்ணக
லம்போ தரச்ச விகடோ விக்நராஜோ விநாயக
துாமகேதுர் கணாத்யக்ஷோ பாலசந்த்ரோ கஜாநந
வக்ரதுண்ட சூர்ப்பகர்ணோ ஹேரம்ப ஸ்கந்தபூர்வஜ
பொருள்
ஸுமுகன் – அழகிய முகம் உடையவர்
ஏகதந்தன் – ஒற்றைத் தந்தம் உடையவர்
கபிலர் – கரியநிறம் வாய்ந்தவர்
கஜகர்ணர் – யானை காது கொண்டவர்
லம்போதரர் – பெருவயிறு உடையவர்
விகடர் – யானை முகத்தால் வேடிக்கை காட்டுபவர்
விக்ன ராஜர் – தடைகளை நீக்குபவர்
விநாயகர் – தெய்வங்களில் முதல்வர்
துாமகேது – அழகானவர்
கணாத்யேக்ஷர் – தேவகணங்களுக்கு அதிபதி
பாலசந்திரர் – பிறைநிலா அணிந்தவர்
கஜானனர் – யானை முகம் கொண்டவர்
வக்ரதுண்டர் – வளைந்த துதிக்கை உடையவர்
சூர்ப்பகர்ணர் – அகன்ற காதுகளை உடையவர்
ஹேரம்பர் – ஐந்துமுகம் கொண்டவர்
ஸ்கந்தபூர்வஜர் – கந்தனுக்கு முன் பிறந்தவர்