Monday, January 13, 2025
Homeசெய்திகள்புருனே சென்ற முதல் இந்திய பிரதமர் : மோடிக்கு உற்சாக வரவேற்பு

புருனே சென்ற முதல் இந்திய பிரதமர் : மோடிக்கு உற்சாக வரவேற்பு

புதுடில்லி : அரசு முறைப்பயணமாக புருனே சென்றடைந்தார் பிரதமர் மோடி. அவருக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்தியா மற்றும் புருனே இடையே நட்புறவு ஏற்படுத்தப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 03) புருனே நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவர் புருனே சுல்தான் ஹசனல் போல்கையாவை சந்தித்து இரு தரப்பினருக்கும் இடையேயான பரஸ்பர நட்புறவு குறித்து விவாதிக்க உள்ளார். இதன் மூலம் புருனே சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார்.

புருனே தருஸ்ஸலாம் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு அதிநவீன வரவேற்பு அளிக்கப்பட்டது. புருனேயின் தலைநகர் பந்தர் செரி பெகவானில் அவர் தங்கியுள்ள ஓட்டலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், நமது தேசியக் கொடியுடன் நின்று, பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். நாளை அங்கிருந்து சிங்கப்பூர் செல்கிறார்.

RELATED ARTICLES

Most Popular