Tuesday, December 31, 2024
Homeஆன்மீகம்திருச்செந்தூர் சுப்பிமணிய சுவாமி கோவில்: ஆவணி திருவிழா 24.8.24 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

திருச்செந்தூர் சுப்பிமணிய சுவாமி கோவில்: ஆவணி திருவிழா 24.8.24 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆவணித்திருவிழா வரும் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், வரும் செப்டம்பர் 2-ம் தேதி நடைபெற இருக்கிறது.

தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் ஆவணி திருவிழாவும் ஒன்று.

இந்த ஆண்டு ஆவணி திருவிழா வரும் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முன்னதாக 23ம் தேதி கோவில் யானை அம்மன் மீது கொடி ஊர்வலம் எடுத்து செல்லப்படும். 24ம் தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 5 மணிக்கு கொடிமரம் ஏற்றம், தீபாராதனை நடக்கிறது.

அன்று மாலை 6 மணிக்கு அப்பர் சுவாமிகள் தங்க சப்பரத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு வீதி உழவர்.

பின்னர் வெட்டிவேர் சப்பரத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளுவார். மாலை 4.30 மணிக்கு தங்க சப்பரத்தில் எழுந்தருளுகிறார். வரும் 31ம் தேதி அதிகாலை 5 மணிக்கு பெரிய வெள்ளை சப்பரத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், கடைசி சப்பரத்தில் காலை 10.30 மணிக்கு பச்சை சாத்தி சிறப்பு அபிஷேகங்களும் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments