கடந்த 2022-23 நிதியாண்டில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகளில் இருந்து நீண்ட கால மூலதன ஆதாய வரியாக ரூ.98,681 கோடியை மத்திய அரசு வசூலித்துள்ளது.
ஈக்விட்டி முதலீடுகள் மற்றும் ஈக்விட்டி அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு வரி விதிக்க, மத்திய அரசு ஏப்ரல் 2018 முதல் நீண்ட கால மூலதன ஆதாய வரியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, 12 மாதங்களுக்கு மேல் வைத்திருக்கும் பங்குகளை விற்ற லாபத்துக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. சிறிய லாபம் மட்டுமே பெறுபவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரையிலான லாபத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
இதற்கிடையில், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், நீண்ட கால மூலதன ஆதாய வரி 12.50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது; தள்ளுபடியும் ரூ.1.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.