Wednesday, January 1, 2025
Homeசெய்திகள்குளத்தை ஆக்கிரமித்த நடிகர் நாகார்ஜுனா; மண்டபத்தை இடித்து தள்ளிய அதிகாரிகள்

குளத்தை ஆக்கிரமித்த நடிகர் நாகார்ஜுனா; மண்டபத்தை இடித்து தள்ளிய அதிகாரிகள்

ஹைதராபாத்: தெலங்கானாவில் குளத்தை ஆக்கிரமித்து நடிகர் நாகார்ஜுனா கட்டிய மண்டபத்தை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

ஆக்கிரமிக்கவும் தெலுங்கானா அரசு நீர்நிலைகள் மற்றும் அரசு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 44 ஆண்டுகளாக ஐதராபாத்தை சுற்றியுள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு விவரம் செயற்கைக்கோள் மூலம் அறியப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 56 குளங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

பெரிய கட்டிடம் அதில், மாதப்பூரில் உள்ள தும்மிடிகுண்டா குளம் பகுதியை பிரபல நடிகர் நாகார்ஜுனா ஆக்கிரமித்து பிரமாண்ட கட்டிடம் கட்டியது தெரிய வந்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் மகள் திருமண நிச்சயதார்த்தம், நடிகர்கள் வருண் தேஜ், லாவண்யா தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் இந்த இடத்தில் நடைபெற்றது. படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது.

மொத்தம் 29.24 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த அரங்கில் 10 ஏக்கருக்கு கட்டடங்கள் மட்டுமே உள்ளன. அதில், 3.12 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது 2014ம் ஆண்டே உறுதி செய்யப்பட்டுள்ளது.

இடிப்பு இந்நிலையில், நாகார்ஜுனாவுக்கு சொந்தமான கட்டிடத்தின் ஆக்கிரமிப்பை ஹைதராபாத் பேரிடர் மீட்பு மற்றும் சொத்து பாதுகாப்பு கழகத்தினர் இன்று காலை இடித்து அகற்றினர். அரங்கின் 35 சதவீத கட்டிடங்களை ராட்சத இயந்திரங்கள் மூலம் அதிகாரிகள் இடித்து தள்ளினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments