Tuesday, December 31, 2024
Homeஅரசியல்தொகுதிக்கு ஒரு பார்வையாளர்; தேர்தல் பணியில் தி.மு.க., விறுவிறு!

தொகுதிக்கு ஒரு பார்வையாளர்; தேர்தல் பணியில் தி.மு.க., விறுவிறு!

சென்னை: தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை நியமித்து தி.மு.க., பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

வரும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள திமுக தனது பணிகளை முடுக்கிவிட வேண்டும். இதற்காக 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு சமீபத்தில் அமைக்கப்பட்டது.தி.மு.க., இளைஞரணி செயலர், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஏ.வி.வேலு, தங்கம் தென்னரசு, அமைப்புச் செயலர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவின் ஆலோசனைகளின்படி, 234 தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

அனைத்து தொகுதிகளிலும் பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல், வாக்காளர் சேர்த்தல் மற்றும் நீக்கம் உள்ளிட்ட தேர்தல் பணிகளை தற்போது நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் மேற்பார்வையிட உள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments