Wednesday, January 1, 2025
Homeவர்த்தகம்செப்டம்பரில் 44 லட்சத்தை எட்டிய 'டிமேட்' புதிய கணக்குகள்

செப்டம்பரில் 44 லட்சத்தை எட்டிய ‘டிமேட்’ புதிய கணக்குகள்

புதுடில்லி: கடந்த ஆண்டு செப்டம்பரில், புதிய ‘டிமேட்’ கணக்குகளின் எண்ணிக்கை, 44 லட்சம் அதிகரித்து, மொத்தம், 17.50 கோடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நான்காவது மாதமாக செப்டம்பர் மாதத்தில் புதிய டீமேட் கணக்குகளின் எண்ணிக்கை 40 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

நடப்பு ஆண்டின் துவக்கத்தில் இருந்து மாதந்தோறும் சராசரியாக 40 லட்சம் புதிய கணக்குகள் துவக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பரில் புதிய பங்கு வெளியீடு மூலம் 12 நிறுவனங்கள் ரூ.11,058 கோடி திரட்டியுள்ளன. புதிய பங்கு வெளியீட்டின் இந்த சாதனை அளவின் மூலம் டிமேட் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும், 62க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த ஆண்டு ரூ.64,511 கோடி நிதி திரட்டியுள்ளன. புதிய பங்கு வெளியீட்டில் பங்கேற்பதற்காக, முதலீட்டாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அதிக எண்ணிக்கையில் டீமேட் கணக்குகளைத் திறந்து வருகின்றனர்.

டீமேட் கணக்கு வளர்ச்சியின் நிலையான வேகம் சந்தை ஸ்திரத்தன்மைக்கு சாதகமான அறிகுறியாக சந்தை வல்லுநர்கள் கருதுகின்றனர். புதிய முதலீட்டாளர்களின் எண்ணிக்கையில் இந்த அதிகரிப்பு வெளிநாட்டு நிதி மற்றும் ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்களின் வெளியேற்றத்தை ஈடுசெய்ய உதவும்.

மேலும், சந்தையின் ஏற்ற, இறக்கங்களை கட்டுக்குள் வைத்திருக்கவும் இது உதவும் எனவும் மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

செபியின் அறிக்கையின்படி, உள்நாட்டு குடும்பங்களின் பங்கு முதலீடு 2023 நிதியாண்டில் ரூ.84 லட்சம் கோடியிலிருந்து 2024 நிதியாண்டில் ரூ.128 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments