Thursday, January 2, 2025
Homeவர்த்தகம்தொடர் சரிவுகளுக்குப் பிறகு மீண்டும் எழுச்சி

தொடர் சரிவுகளுக்குப் பிறகு மீண்டும் எழுச்சி

இந்தியப் பங்குச் சந்தை குறியீடுகள் தொடர்ந்து மூன்று நாட்கள் சரிவுக்குப் பிறகு வாரத்தின் கடைசி வர்த்தக நாளில் ஏற்றம் கண்டன. இருப்பினும், வாரத்தின் ஒட்டுமொத்த அடிப்படையில், சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாக சரிவுடன் முடிவடைந்தன.

சந்தையின் குறியீடுகள் தொடக்க வர்த்தகத்தில் சரிவுடன் தொடங்கியது. இருப்பினும், பிற்பகல் வர்த்தகத்தின் போது, ​​முதலீட்டாளர்கள் வங்கி, உலோகம் மற்றும் ரியல் எஸ்டேட் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இதனால், சந்தை ஏற்றத்துடன் முடிந்தது.

நிப்டி குறியீட்டில் வங்கி, ரியல் எஸ்டேட் தவிர, வாகனம் உள்ளிட்ட மற்ற துறை பங்குகள் வீழ்ச்சி கண்டன. சென்செக்ஸ் குறியீட்டில், 1,942 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 1,933 நிறுவன பங்குகள் குறைந்தும், 108 நிறுவனங்களின் பங்குகள் விலை மாற்றமின்றியும் காணப்பட்டன.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ச்சியாக வெளியேறினாலும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் களமிறங்குவதால், சந்தை ஓரளவு மீண்டுள்ளது.எனினும், உலக சந்தை குறியீடுகளும், இரண்டாம் காலாண்டு முடிவுகளும், வரும் வாரத்திற்கான சந்தை போக்கை நிர்ணயிக்கும் என, பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 5,486 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்திருந்தனர்.

கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.07 சதவீதம் குறைந்து, 74.40 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 பைசா குறைந்து, 84.07 ரூபாயாக இருந்தது.

டாப் 5 நிப்டி 50 பங்குகள்

RELATED ARTICLES

Most Popular

Recent Comments