புதுடில்லி: இண்டிகோ விமான நிறுவன ஊழியர்களின் அலைக்கழிப்பால், சரியான நேரத்திற்கு சென்ற போதும், விமானத்தை தவறவிட்டு விட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கு சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டு விட்டது. அடுத்த மாதம் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கு முன்னோட்டமாக இந்த தொடர் இருக்கும் என்பதால், இந்திய வீரர்களின் ஆட்டத்தை ஒட்டுமொத்த ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.