விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
108 வைணவத் தலங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
லட்சுமி தேவியின் அம்சமான ஸ்ரீ ஆண்டாள் மானிடப் பெண்ணாகப் பிறந்து, மாலை ஏற்றி, பாமாலை பாடி இறைவனை அடைந்ததாக வரலாறு உண்டு. இங்கு ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடிப்பூரத்தன்று தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
12 நாட்கள் நடைபெறும் ஆடிப்பூர விழாவில் ஐந்தாம் நாள் (3ம் தேதி) கருட சேவையும், 5ம் தேதி சயன சேவையும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான திருஆதிபுரம் தேரோட்டம் ஆகஸ்ட் 7ம் தேதி காலை 9.05 மணிக்கு நடைபெறுகிறது.
ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் பெரிய திருத்தேரில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வைபவத்தின் போது, திரு ஆடிப்பூரத் தேர்த் திருவிழாவில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வர்.
ஆடிப்பெருக்கு தேர்த்திருவிழாவையொட்டி ஆண்டாள் கோயிலில் நடைபெற்ற கொடியேற்றத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆண்டாள் சாமி தரிசனம் செய்தனர். தேர் திருவிழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.