சென்னை: ”தமிழகத்தில் தற்போது இருக்கின்ற கல்வி முறையே போதும். புதிய கல்வி முறை தேவை இல்லை,” என, சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ‘சட்டமன்ற தலைவர் – கலைஞர்’ என்ற தலைப்பில், மாநில அளவிலான கருத்தரங்கு, சென்னை, மயிலாப்பூர் ரோசரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மத்திய அரசு 8ம் வகுப்பு வரை கல்வியை கட்டாயமாக்குகிறது.பள்ளியின் உள்கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. தமிழக அரசு கல்விக்காக அதிக நிதி ஒதுக்குகிறது. நடப்பு பட்ஜெட்டில் கல்விக்காக ரூ.44,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த பட்ஜெட்டில் 8 சதவீதமாகும். அதற்கு செல்ல உயர் கல்வி உள்ளது.
இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கையில் மத்திய அரசு கையெழுத்திட்டால் மட்டுமே, ‘சமக்ர ஷிக் ஷா அபியான்’ திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படும் என கூறுகிறது. இது நியாயமா? எந்த அரசும் கொண்டு வரும் எந்த கல்விக் கொள்கையையும் எதிர்ப்பது நோக்கம் அல்ல.
மோடி கொண்டு வந்ததால் ஏற்க மாட்டோம் என்று கூறவில்லை. ஆனால், ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாவிட்டால், தந்தை வேலைக்குச் செல்ல வேண்டும் என்று மறைந்த ராஜாஜி கொண்டு வந்த குலக் கல்வித் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதை ஸ்டாலின் எதிர்க்கிறார்.
நாட்டில் 10 கோடிக்கும் அதிகமான தமிழ் பேசும் மக்கள் உள்ளனர். சுமார் 25,000 பேர் சமஸ்கிருதம் பேசுகிறார்கள். அந்த மொழியைப் படிப்பது கட்டாயம் என்று சொல்வது நியாயமா? எனவே, சமஸ்கிருதம் தேவையில்லை என்று முதல்வர் கூறுகிறார். தமிழகத்தில் தற்போது உள்ள முறையே போதுமானது. புதிய கல்வி முறை தேவையில்லை. இவ்வாறு, அவர் பேசினார்.