புதுடெல்லி: ஸ்பெயின் டென்னிஸ் போட்டியில் அங்கிதா ரெய்னா 2வது சுற்றுக்கு முன்னேறினார். ஸ்பெயினில் நடைபெற்று வரும் மகளிர் ஐடிஎஃப் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா, பிரிட்டனின் அமெலியா ரெகெக்கியை சந்தித்தார். ‘டை பிரேக்கருக்கு’ சென்ற முதல் செட்டை அங்கிதா 6-7 என இழந்தார்.
இரண்டாவது செட்டும் ‘டை பிரேக்கர்’ வரை நீண்டது. இம்முறை அன்கிதா 7-6 என வசப்படுத்தினார். அடுத்து நடந்த மூன்றாவது, கடைசி செட்டில் அன்கிதா, 6-3 என அசத்தினார். இரண்டு மணி நேரம், 24 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் அன்கிதா, 6-7, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார். இதில் ஸ்பெயினின் மார்டினசை சந்திக்க உள்ளார்.