டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுலுக்கு ஐந்தாவது வரிசையில் இருக்கை அளிக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் கூறுகையில், ”சுதந்திர தின விழாவில் பங்கேற்கும் லோக்சபா, ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர்களுக்கு, மரபுப்படி முன் வரிசையில் இருக்கை ஒதுக்க வேண்டும்.
ஆனால் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மற்றும் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் கார்கே ஆகியோருக்கு ஐந்தாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது, இது மரபை மீறும் செயலாகும். இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்களை கவுரவப்படுத்தும் வகையில், அவர்களுக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது.
‘இதனால், அரசியல் தலைவர்களுக்கு ஐந்தாவது வரிசையில் இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில், எந்த விதிமீறலும் இல்லை’ என, குறிப்பிட்டுள்ளது.