Wednesday, January 1, 2025
Homeசெய்திகள்ரயில் விபத்துகளில் மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை: கொந்தளிக்கிறார் ராகுல்

ரயில் விபத்துகளில் மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை: கொந்தளிக்கிறார் ராகுல்

புதுடில்லி: ‘ரயில் விபத்துகளில் மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை’ என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்கா சென்ற எக்ஸ்பிரஸ் ரயில், திருவள்ளூர் – கவாரிப்பேட்டை வழித்தடத்தில் ‘லூப் லைனில்’ சென்ற சரக்கு ரயில் மீது மோதியது. ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் ரயில் விபத்தை போன்று இந்த சம்பவமும் நடந்துள்ளது.’லூப் லைனில்’ நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் 3 நாட்களாக நிற்கிறது. இது குறித்து 3 நாட்களாக ஸ்டேஷன் மாஸ்டருக்கு தெரியாதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், சமூக வலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மைசூரு – தர்பங்கா ரயில் விபத்து ஒடிசா பாலசூர் சோகத்தை பிரதிபலிக்கிறது. நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியது. ரயில் விபத்துகளுக்கு ரயில்வே அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்.

பல விபத்துகளில் பல உயிர்கள் பலியாகியும் மத்திய அரசு பாடம் கற்கவில்லை. இந்த அரசாங்கம் விழித்துக் கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழிக்கப்பட வேண்டும்? இவ்வாறு ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments