Tuesday, December 31, 2024
Homeஅரசியல்புகாருக்கு மேல் புகார் வருது; தேர்தல் கமிஷனில் சொல்லப்போறோம்: ராகுல் தந்த 'அப்டேட்'

புகாருக்கு மேல் புகார் வருது; தேர்தல் கமிஷனில் சொல்லப்போறோம்: ராகுல் தந்த ‘அப்டேட்’

புதுடில்லி: ‘ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக புகார்கள் வந்துள்ளன. இது குறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்க உள்ளேன்’ என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹரியானா சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து புகார்கள் வந்துள்ளன.பல தொகுதிகளில் இருந்து வந்த புகார்கள் குறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்க உள்ளேன். ஆதரவு அளித்த ஹரியானா மக்களுக்கும், அயராது உழைத்த எங்கள் தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

ஹரியானாவின் எதிர்பாராத முடிவை நாங்கள் பகுப்பாய்வு செய்கிறோம். உரிமைகள், பொருளாதார நீதி மற்றும் உண்மைக்கான இந்தப் போராட்டத்தைத் தொடருவோம். மக்களின் குரலை ஆதரிப்போம்.

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மனமார்ந்த நன்றி. மாநிலத்தில் இந்தியாவின் அனைத்து வெற்றியும் அரசியலமைப்பு சட்டத்திற்கும் ஜனநாயக சுயமரியாதைக்கும் கிடைத்த வெற்றியாகும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments