Tuesday, December 31, 2024
Homeசெய்திகள்பிரதமர் மோடி பரிசளித்த கிரீடம் திருடப்பட்டது; வங்கதேச கோவிலில் போலீஸ் விசாரணை

பிரதமர் மோடி பரிசளித்த கிரீடம் திருடப்பட்டது; வங்கதேச கோவிலில் போலீஸ் விசாரணை

டாக்கா: பிரதமர் மோடி பரிசளித்த கிரீடம் காணாமல் போனது பற்றி வங்கதேச காளி கோவிலில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கதேசத்தில் உள்ள சத்கிரா ஷியாம் நகரில் புகழ்பெற்ற ஜெஷோரேஸ்வரி கோயில் உள்ளது. பிரதமர் மோடி 2021ஆம் ஆண்டு வங்கதேசம் சென்றிருந்தபோது, ​​இந்த காளி கோயிலுக்கு கிரீடம் ஒன்றை பரிசாக வழங்கினார். தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி கிரீடம் காளி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

நேற்று மதியம் கோவில் பூசாரி பூஜையை முடித்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டார். மாலையில் மீண்டும் கோவிலுக்கு வந்து பார்த்தபோது, ​​கிரீடம் திருடு போனது தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments