சென்னை: கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கே.எம்.சி.எச்., சென்னையில் சொந்தமாக மருத்துவமனை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள காரப்பாக்கத்தில் உள்ள 2.2 லட்சம் சதுர அடி சொத்தை ரூ.121 கோடிக்கு நிறுவனம் கையகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னையில், கே.எம்.சி.எச்., மருத்துவமனை அமைப்பது குறித்து, ‘எந்த நகரத்தில், கிளை விரிவுபடுத்தப்படும் என்பது, அந்நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழுவிலோ அல்லது இயக்குனர்கள் கூட்டத்திலோ அறிவிக்கப்படும்’ என, செயல் இயக்குனர் அருண் பழனிசாமி கூறியுள்ளார்.