டாக்டர் அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியில் 78 வது சுதந்திர தின விழா மற்றும் மாணவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா சிறப்பாக நடைபெற்றது. சுதந்திர தின விழாவில் தாளாளர் முகைதின் முசாபர் அலி மற்றும் நிர்வாக இயக்குனர் முகம்மது சீனி ஆகியோர் மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு தேசிய கொடியை ஏற்றினார். பின்பு பிரைமரி முதல்வர் ஜெயசுதா வரவேற்புரை வழங்கினார்.
மாணவர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளின் மூலம் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிர்வாக இயக்குனர் முகம்மது சீனி பாதுஷா சிறப்புரை ஆற்றினார். செகன்டரி முதல்வர் அனில் நன்றி கூறினார்.