வலுவான பொருளாதார இயக்கத்தால் இயக்கப்படும் இந்திய சந்தை எங்களுக்கு மிக முக்கியமானது என்பதால், எங்களின் விமான சேவையை இந்தியாவில் விரிவுபடுத்த விரும்புகிறோம்.
இது, அடுத்த ஆண்டே நடக்கும். தற்போது மலேஷியா ஏர்லைன்ஸ் இந்தியாவுக்கு இயக்கப்படும் வாராந்திர விமான சேவை எண்ணிக்கையை, தினசரி சேவையாக அதிகரிப்பது குறித்தும், புதிய இடங்களுக்கான விமான சேவையை விரிவாக்குவது குறித்தும் நாங்கள் ஆர்வமும், விருப்பமும் கொண்டுள்ளோம்.