இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர், மூத்த வீரர் கோஹ்லி. டெல்லியைச் சேர்ந்த இருவரும் இந்தியாவுக்காக ஒன்றாக விளையாடியுள்ளனர். ஐ.பி.எல்., போட்டியில் இருவரும் வெவ்வேறு அணிகளுக்காக விளையாடிய போது, அவ்வப்போது மோதல் ஏற்பட்டது. 2023ல் லக்னோ அணியின் ஆலோசகராக இருந்த கம்பீர், கோஹ்லியுடன் (பெங்களூரு) கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தற்போது புதிய பயிற்சியாளராக கம்பீர் வந்துள்ளதால், கோஹ்லியுடன் எப்படி பணியாற்றுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கம்பீர்-கோஹ்லி நேருக்கு நேர் பேட்டியை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
கோஹ்லி: நீங்கள் கிரிக்கெட் விளையாடும் போது, இப்படி ஒரு பயிற்சியாளராக வருவீர்கள் என்று நினைத்தீர்களா? கம்பீர்: சில மாதங்களுக்கு முன்பு வரை நான் இப்படி நினைத்ததில்லை. தற்போது மீண்டும் இந்தியாவுக்காக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது பெருமையாக உள்ளது. 2025-ல் சாம்பியன்ஸ் டிராபி, 2026-ல் டி-20 உலகக் கோப்பை, 2027-ல் ஒருநாள் உலகக் கோப்பை தொடர்கள் அடுத்தடுத்து வர உள்ளன.
இதில் இந்தியாவை வெற்றிபெற வைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளேன். சொல்லப்போனால், நீங்கள் அறிமுகப்படுத்திய போட்டியைப் பார்த்தேன். தென்னாப்பிரிக்காவில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடினமான ஆடுகளத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டீர்கள்.
ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 300 ரன்களுக்கு மேல் சேஸ் செய்த போது 183 ரன்கள் எடுத்ததே ODIகளில் உங்களின் சிறந்த இன்னிங்ஸ். இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்ல இதுபோன்ற சிறப்பான தருணங்கள் முக்கியம். அடுத்த தலைமுறை வீரர்களுக்கு எப்படி செயல்பட வேண்டும் என்பதை தெரிவித்துள்ளீர்கள்.
டெஸ்டில் 20 விக்கெட்டுகள் சாய்த்தால் தான் வெற்றி பெற முடியும் என்பதால், வலுவான பவுலிங் படையை உருவாக்கி, வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக உருவெடுத்தது சிறப்பு.
கோலி: பேட்டிங் செய்யும் போது, எதிரணி வீரர்களுடன் வாக்குவாதம் செய்வதால், விரைவில் அவுட்டாகிவிடலாம் என நினைப்பீர்களா அல்லது அதுவே சிறப்பாக செயல்பட துாண்டுகோலாக அமையுமா?காம்பிர்: என்னை விட நீங்கள் தான் அதிகமுறை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளீர்கள். இந்த கேள்விக்கு நீங்கள் தான் சிறந்த பதில் தர முடியும்
கோலி: நான் சொல்வதை ஏற்றுக் கொள்ளும் ஒருவரைத் தான் தேடுகிறேன். இதை தவறு என சொல்ல மாட்டேன். களத்தில் அப்படித் தான் நடக்கும். அடுத்து வரும் 10 டெஸ்ட், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இணைந்து செயல்பட்டு மறக்க முடியாத நினைவுகளை ஏற்படுத்துவோம்.