மும்பை: செபி’ அமைப்பின் தலைவர் மாதவி புரி புச், விதிகளை மீறி, 2017 – 2022 ஆண்டுகளுக்கு இடையில் தன் முதலீட்டு ஆலோசனை நிறுவனம் வாயிலாக, 3.71 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியிருப்பதாக, புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
‘அதானி’ குழுமத்தின் சட்டவிரோத முதலீட்டு நிறுவனங்களில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளரான ‘செபி’ அமைப்பின் தலைவர் மாதவி புரி புச், அவரது கணவர் தவல் புச் ஆகியோர் முதலீடு செய்திருப்பதாக, ஹிண்டர்பர்க் ஆய்வு நிறுவனம், அண்மையில் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தது. ஆனால், இவையனைத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மாதவி மறுத்திருந்தார்.
2017 முதல் 2022 வரை, ‘அகோரா அட்வைசரி பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் 99 சதவீத பங்குகளை வைத்து, 3.71 கோடி ரூபாய் வருமானம் ஈட்டினார். பதிவாளரிடம் தாக்கல் செய்த அந்நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது ‘ராய்ட்டர்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2017ம் ஆண்டு ‘செபி’அமைப்பின் முழு நேர உறுப்பினராக இணைந்த மாதவி புரி புச், கடந்த 2022ல் செபி அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றார்.
SEBI விதிகளின்படி, அலுவலகத்தின் முழுநேர உறுப்பினர்கள் வேறு எந்த தொழில்முறை நடவடிக்கையிலும் சம்பளம் அல்லது லாபம் பெறுவது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் மாதவியின் நடவடிக்கைகள் இந்த விதிகளுக்கு முரணானவையாக காணப்படுகின்றன. அவ்வாறு கூறுகிறது.