மதுரை: ‘தவறு செய்தவன் மன்னன், ஆனால் கேள்வி கேட்ட மண் மதுரை’ என, மாமதுரை திருவிழாவை துவக்கி வைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசினார். மதுரையில் 4 நாட்கள் மாமதுரை நிகழ்ச்சி நடக்கிறது. சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் நிகழ்ச்சியை துவக்கி வைத்து, செயல்தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: கண்ணகி அரசனை கேள்வி கேட்ட இடம் மதுரை. கேள்வி கேட்ட மண் மதுரை தான் ஆனால் மன்னன் தான் தவறு செய்தான்.
சென்னைக்கு அடுத்து 2வது மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது மதுரை. மாபெரும் பண்ணாட்டு விழாவாக சித்திரை திருவிழா நடக்கிறது. திராவிட மாடல் ஆட்சி மதுரைக்கு 2 அமைச்சர்களை கொடுத்துள்ளது. திமுக இளைஞரணி துங்கப்பட்ட இடமும் மதுரை தான்.
பழைய நகரை பாதுகாக்க வேண்டியது அவசியம். அதே சமயம் நவீன வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். கலாச்சார விழாவை அனைவரும் கொண்டாட வேண்டும். மதுரை தமுக்கம் மைதானம், காலப்போக்கில் மதுரை மாநகரம் மாறிவரும் காட்சிகளைக் கண்டது. சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து மாமதுரை விழாவைக் கொண்டாட வேண்டும். பழமைக்குப் பழமை, புதுமைக்குப் புதுமை என இளைஞர்கள் பாராட்டி ஊரைக் காக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.