காத்மாண்டு: நேபாளத்தில் 19 பயணிகளுடன் சென்ற விமானம் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பொக்காராவுக்கு சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. 19 பயணிகளுடன் சென்ற விமானம் திடீரென ஓடுபாதையில் இருந்து சறுக்கி தரையில் விழுந்து நொறுங்கியது. விமானம் தீப்பிடித்தது.
விமானத்தில் பயணம் செய்த 19 பயணிகளில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்வதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. தீயை அணைத்து பயணிகளை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. விபத்துக்குப் பிறகு, திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.