சென்னை: முதல்வர் ஸ்டாலின் அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அவர் இந்த மாதம் அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தார்; பின்னர் தேதி மாற்றப்பட்டது. சுதந்திர தினத்தன்று கோட்டையில் முதல்வர் கொடி ஏற்ற உள்ளார். அதன்பிறகு, ஆகஸ்ட் 22-ம் தேதி அவர் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா செல்கிறார் என்று தகவல் வெளியானது.
முதல்வர் வெளிநாடு செல்ல மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. 15 நாட்கள் வெளிநாடு செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அவர் வெளிநாடு செல்லும் முன், தமிழக அமைச்சரவையில் மாற்றம் வரலாம்; உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.