டெல்லி: தற்போதைய சூழலில் லோக்சபா தேர்தல் நடந்தால், பா.ஜ.,வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக, ‘லேட்டஸ்ட்’ சர்வேயில் தெரியவந்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என எதிர்பார்த்த பாஜக 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இது கடந்த தேர்தலை விட 63 இடங்கள் குறைவு.
அதேபோல கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியது. 2014ல் 44 இடங்களிலும், 2019ல் 52 இடங்களிலும் வென்ற காங்கிரஸ், 2024 மக்களவைத் தேர்தலில் 99 இடங்களைக் கைப்பற்றியது. இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது.
இந்நிலையில் தேசத்தின் மனநிலை என்ற தலைப்பில் இந்தியா டுடே ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 10 வரை சர்வே நடத்தியது. அதன்படி, ஆகஸ்ட் 22-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றிருந்தால் பாஜக கூட்டணிக்கு 335 இடங்களும், இந்தியக் கூட்டணிக்கு 166 இடங்களும் கிடைத்திருக்கும் என்று தெரியவந்துள்ளது.
லோக்சபா தேர்தலில் பெற்றதை விட, பா.ஜ.,வுக்கு 4 இடங்கள் கூடுதலாக கிடைக்கும்; ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற்ற தேர்தலில் பாஜக 240 இடங்களை கைப்பற்றியதாகவும், தற்போது 244 இடங்களை கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.