பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.,வை மீண்டும் ஒருங்கிணைக்கும் முயற்சியில், முன்னாள் எம்.பி., கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., ஜே.சி.டி.பிரபாகரன் மற்றும் பெங்களூரு புகழேந்தி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இம்முயற்சிக்கு மாவட்ட வாரியாக ஆதரவாளர்கள் திரட்டப்பட்டு, ஒருங்கிணைப்புக் குழு என்ற பெயரில் அ.தி.மு.க., தனி அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்தக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள ஓட்டலில் இன்று மாலை நடைபெறுகிறது. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு இரண்டு பிரதிநிதிகள் இதில் பங்கேற்பார்கள். மேலும், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்து, அ.தி.மு.க.வை பலப்படுத்தி, 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதே இந்த குழுவின் நோக்கம். அதை வலியுறுத்தி இன்றைய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர்.
இக்குழுவினரின் முயற்சிக்கு எந்தளவு ஆதரவு உள்ளது என்பதை, இன்றைய கூட்டத்தில், அ.தி.மு.க., வட்டரத்தில் பங்கேற்றவர்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.