Thursday, January 2, 2025
Homeஅரசியல்5 ஆண்டுகள்; 10 ஆயிரம் பேர்; மணிப்பூர் முதல்வர் கணக்கு போடுகிறார்!

5 ஆண்டுகள்; 10 ஆயிரம் பேர்; மணிப்பூர் முதல்வர் கணக்கு போடுகிறார்!

 

மணிப்பூரில் கடந்த 5 ஆண்டுகளில் 10,675 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்’ என முதல்வர் பிரேன் சிங் சட்டசபையில் தெரிவித்தார். கடந்த ஆண்டு மே மாதம் முதல் நடந்து வரும் வன்முறைகள் குறித்து, மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் சட்டசபையில் கூறியதாவது: கூகி, மைடி ஆகிய இரு சமூகங்களைச் சேர்ந்த 226 பேர் வன்முறையில் கொல்லப்பட்டனர்.

நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை திரும்ப ஒப்படைக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. நிவாரண முகாம்களில் உள்ள மாணவர்கள் அருகில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படிப்பை தொடர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 3,483 விவசாயிகளுக்கு ரூ.18.91 கோடி பயிர் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.வீடுகள் சேதமடைந்த 2,792 குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25,000 வழங்கப்பட்டுள்ளது. 59,414 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

11,892 வழக்குகள் வன்முறை தொடர்பாக 11,892 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மணிப்பூரில் கடந்த 5 ஆண்டுகளில் 10,675 சட்டவிரோத குடியேறிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் மியான்மர், சீனா, பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments