Tuesday, December 31, 2024
Homeவிளையாட்டுஇந்தப் புன்னகை என்ன விலை: கோலி இதயம் சொன்ன விலை

இந்தப் புன்னகை என்ன விலை: கோலி இதயம் சொன்ன விலை

புதுடில்லி: ”தவான் உடன் விளையாடிய காலங்கள் இனிமையானவை. அவரது புன்னகையை ‘மிஸ்’ செய்வோம்,”என விராத் கோலி தெரிவித்தார்.

இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான், 38, தனது 13 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கைக்கு நேற்று ‘குட்-பை’ கூறினார். 2013-19ல், ரோகித் சர்மா மற்றும் தவான் தொடக்க ஜோடி அற்புதமாக இருந்தது. தவான், ரோஹித், கோஹ்லி இணைந்து ‘டாப்-ஆர்டரில்’ மிரட்டினர். தவானின் ஓய்வு குறித்து கிரிக்கெட் பிரபலங்கள் கூறியதாவது

ரோகித் சர்மா: ‘டிரஸ்சிங் ரூம்’ டூ கிரிக்கெட் களம் வரை தவானுடன் செலவிட்ட நேரம் மறக்க முடியாதது. துவக்க வீரராக வந்த இவர், மறுமுனையில் ஆடிய எனது பணியை சுலபமாக்கினார்.

கோஹ்லி: தவான் இந்தியாவின் நம்பகமான தொடக்க பேட்ஸ்மேன். அவரது விளையாட்டு உணர்வு, துணிச்சலான ஆட்டம், கிரிக்கெட் மோகம் என பல விஷயங்களை நாம் நினைத்துப் பார்க்கலாம். அவரது தனித்துவமான புன்னகையை நாங்கள் ‘மிஸ்’ செய்வோம். மறக்க முடியாத நினைவுகளுக்கு நன்றி. உங்கள் வாழ்க்கையின் அடுத்த இன்னிங்ஸுக்கு வாழ்த்துக்கள்.

ரவி சாஸ்திரி: இந்திய அணியின் பயிற்சியாளராக நான் 7 ஆண்டுகள் இருந்தபோது, ​​தவானின் திறமையைப் பாராட்டினேன். ஐசிசி தொடரில் அசைக்க முடியாத வீரராக ஜொலித்தார். அவன் இளைஞன். கிரிக்கெட்டில் அவரது பங்களிப்பை ஏதோ ஒரு வகையில் எதிர்பார்க்கிறேன்.

சூர்யகுமார்: உங்களது கிரிக்கெட் வாழ்க்கை அழகானது. ‘மிஸ்டர். ஐ.சி.சி.,’ என போற்றும் அளவுக்கு சிறப்பானது.

யூசுப் பதான்: களத்தில் நீங்கள் நிற்கும் ‘ஸ்டைல்’, அர்ப்பணிப்பு உணர்வுடன் கிரிக்கெட் விளையாடும் திறனை மறக்க முடியாது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments