Tuesday, December 31, 2024
Homeவிளையாட்டுஅல்காரஸ், ஒசாகா அதிர்ச்சி தோல்வி: யு.எஸ்., ஓபன் டென்னிசில் ஏமாற்றம்

அல்காரஸ், ஒசாகா அதிர்ச்சி தோல்வி: யு.எஸ்., ஓபன் டென்னிசில் ஏமாற்றம்

நியூயார்க்: யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஸ்பெயினின் அல்காரஸ், ஜப்பானின் ஒசாகா அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.

அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றையர் 2வது சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கார்ஸ், நெதர்லாந்தின் போடிக் வான் டி ஜான்ட்ஸ்கால்ப் மோதினர். இரண்டு மணி நேரம் 19 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் அல்கார்ஸ் 1-6, 5-7, 4-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தார். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் அரங்கில் தொடர்ச்சியாக 15 போட்டிகளில் வெற்றி பெற்ற அல்காசரின் தொடர் வெற்றி முடிவுக்கு வந்தது.

மற்றொரு 2வது சுற்றுப் போட்டியில் உலகின் ‘நம்பர்-1’ இத்தாலியின் ஜானிக் சின்னர் 6-4, 6-0, 6-2 என அமெரிக்காவின் அலெக்ஸ் மைக்கேல்சனை தோற்கடித்தார். மற்ற 2வது சுற்றுப் போட்டிகளில் ரஷ்யாவின் டேனியல் மெத்வெடேவ், அமெரிக்காவின் டாமி பால், பிரிட்டனின் டேனியல் ஈவன்ஸ், பெல்ஜியத்தின் டேவிட் கோபின், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் வெற்றி பெற்றனர்.

ஒசாகா அதிர்ச்சி: பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, செக் குடியரசின் கரோலினா முச்சோவாவை சந்தித்தார். இதில் ஏமாற்றிய ஒசாகா 3-6, 6-7 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

மற்றொரு 2வது சுற்றில் உலகின் நம்பர்-1 வீரரான போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-0, 6-1 என்ற செட் கணக்கில் ஜப்பானின் எனா ஷிபஹாராவை வீழ்த்தினார். அமெரிக்க வீராங்கனையான ஜெசிகா பெகுலா 7-6, 6-3 என்ற செட் கணக்கில் சகநாட்டு வீராங்கனையான சோபியா கெனினை தோற்கடித்து மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற 2வது சுற்றில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, கஜகஸ்தானின் யூலியா புடின்ட்சேவா, ரஷ்யாவின் அனஸ்டாசியா பாலிசென்கோவா மற்றும் இத்தாலியின் சாரா எர்ரானி ஆகியோர் வெற்றி பெற்றனர். செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவும், கஜகஸ்தானின் எலினா ரைபாகினாவும் அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.

போபண்ணா ஜோடி அபாரம்ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டென் ஜோடி 6-3, 7-5 என நெதர்லாந்தின் சாண்டர் அரேன்ட்ஸ், ராபின் ஹாஸ் ஜோடியை வீழ்த்தியது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments