Friday, January 3, 2025
Homeசெய்திகள்ஆம், நான் ஒரு குற்றவாளி தான்: வரி ஏய்ப்பை ஒப்புக்கொண்டார் பைடன் மகன் ஹன்டர்

ஆம், நான் ஒரு குற்றவாளி தான்: வரி ஏய்ப்பை ஒப்புக்கொண்டார் பைடன் மகன் ஹன்டர்

வாஷிங்டன்: 1.4 மில்லியன் டாலர் வரி ஏய்ப்பு வழக்கில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகன் ஹன்டர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடன் உள்ளார். இவரது மகன் ஹண்டர் பிடன், 52. இவர் மீது, 2019ல் வருமான வரி ஏய்ப்பு மற்றும் சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வருமான வரி : டெலாவேர் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் டேவிட் சார்லஸ் வெயிஸ் கூறுகையில், ‘ஹண்டர் பிடனுக்கு 3 குற்ற வழக்குகள் உள்ளன. அவர் $1.4 மில்லியன் வரை வருமான வரி செலுத்தத் தவறிவிட்டார். பல ஆண்டுகளாக பொய்யான வரி கணக்குகளை சமர்ப்பித்துள்ளார்’ என, குற்றம் சாட்டினார்.

குற்றப்பத்திரிகை

குற்றப்பத்திரிகையில், ‘ஹன்டர் தனது வரிக் கட்டணத்தைச் செலுத்துவதற்குப் பதிலாக ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு மில்லியன் கணக்கான டாலர்களை செலவழித்துள்ளார். 2015ல் வரிகளை செலுத்துவதை நிறுத்திவிட்டார்’ என தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

தப்பு பண்ணிட்டேன்! இந்த வழக்கில், டிசம்பர் 16ஆம் தேதி, நீதிபதி மார்க் ஸ்கோர்சி அவருக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 4,50,000 டாலர் அபராதமும் விதித்தார். இப்போது வரை, ஹண்டர் பிணையில் சுதந்திரமாக இருக்கிறார். இந்நிலையில், 1.4 மில்லியன் டாலர் வரி ஏய்ப்பு வழக்கில் ஜோ பிடனின் மகன் ஹண்டர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். நீதிமன்ற தீர்ப்பை ஏற்க தயார் என்றார்.

பின்னர் ஹண்டர் பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தனது குடும்பத்தை ஒரு விசாரணையில் இருந்து காப்பாற்ற குற்றத்தை ஒப்புக்கொண்டேன்’ என குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே அதிபர் தேர்தல் பிரச்சாரம் களைகட்டி உள்ளது. தேர்தல் நேரத்தில் இந்த வழக்கு விசாரணை மேலும் இழுத்தடிக்கப்பட்டால், தன் தந்தை சார்ந்துள்ள கட்சி வேட்பாளருக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நவம்பர் 5 ஆம் தேதி ஜனநாயகக் கட்சியின் துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சியின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோரை வாக்காளர்கள் தேர்வு செய்வார்கள். சக ஜனநாயகக் கட்சியினரின் அழுத்தம் காரணமாக ஜூலை மாதம் பிடென் போட்டியிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments