Tuesday, December 31, 2024
Homeவிளையாட்டுபாபா இந்திரஜித் சதம்: புச்சி பாபு கிரிக்கெட்டில் அபாரம்

பாபா இந்திரஜித் சதம்: புச்சி பாபு கிரிக்கெட்டில் அபாரம்

கோவை: புச்சி பாபு கிரிக்கெட்டில் தமிழக கிரிக்கெட் சங்க லெவன் அணியின் பாபா இந்திரஜித் சதம் விளாசினார்.

புச்சி பாபு கிரிக்கெட் தொடரை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்துகிறது. கோவையில் நடைபெறும் ‘சி’ பிரிவு லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) லெவன் அணியும், ஹரியானா அணியும் மோதுகின்றன. டாஸ் வென்று முதலில் பேட் செய்த TNCA XI அணிக்கு லோகேஷ்வர் (99), பாபா இந்திரஜித் (139*, ‘ரிட்டயர்டு ஹர்ட்’) நம்பிக்கை அளித்தனர். முதல் நாள் முடிவில் TNCA XI முதல் இன்னிங்சில் 329/2 ரன் எடுத்துள்ளது.

சித்தார்த்தின் அரைசதம்: சேலத்தில் நடக்கும் ‘பி’ பிரிவு லீக் போட்டியில் டிஎன்சிஏ, பிரசிடென்ட் லெவன், இந்தியன் ரயில்வே அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பிரசிடென்ட் லெவன் அணிக்கு விமல் குமார் (42), மாதவ பிரசாத் (47) உதவினர். முஹம்மது அலி (62*), ஆண்ட்ரே சித்தார்த் (81) ஆகியோர் அரைசதம் கடந்தனர். ஆட்ட நேர முடிவில் பிரசிடென்ட் லெவன் அணி முதல் இன்னிங்சில் 283/6 ரன்கள் எடுத்தது.

ஜார்க்கண்ட் ‘178’: திருநெல்வேலியில் நடக்கும் ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டத்தில் ஜார்கண்ட் மற்றும் ஐதராபாத் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜார்கண்ட் அணி முதல் இன்னிங்சில் 178 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சரந்தீப் சிங் (78) ஆறுதல் கூறினார். ஹைதராபாத் தரப்பில் தனய் தியாகராஜன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்ட நேர முடிவில் ஹைதராபாத் அணி முதல் இன்னிங்சில் 61/1 ரன் எடுத்திருந்தது.

பரோடா ‘255’: திண்டுக்கல், நுட்டாவில் நடக்கும் ‘டி’ பிரிவு லீக் போட்டியில், ஜம்மு காஷ்மீர், பரோடா அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பரோடா அணி முதல் இன்னிங்சில் 255 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. காஷ்மீர் தரப்பில் சாஹல் லோத்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்ட நேர முடிவில் காஷ்மீர் அணி முதல் இன்னிங்சில் 29/2 ரன் எடுத்திருந்தது. Parōṭā’255′.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments