Wednesday, January 1, 2025
Homeஅரசியல்புருனே, சிங்கப்பூர் பயணம் நிறைவு: நாடு திரும்பினார் மோடி

புருனே, சிங்கப்பூர் பயணம் நிறைவு: நாடு திரும்பினார் மோடி

புதுடில்லி: புருனே , சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகள் பயணம் நிறைவடைந்ததையடுத்து இரவு நாடு திரும்பினார் பிரதமர் மோடி.

ஆசியாவின் சிறிய நாடான புருனேவுடனான தூதரக உறவு, 40 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், முதல் இந்தியப் பிரதமராக, நரேந்திர மோடி அங்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அந்த நாட்டின் சுல்தான் ஹசனல் போல்கியாவுடன், இரு தரப்பு உறவுகள், சர்வதேச பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி பேசினார்.

அங்கிருந்து மற்றொரு ஆசிய நாடான சிங்கப்பூர் சென்றடைந்தார். பிரதமராக பதவியேற்ற அவர் இது ஐந்தாவது முறையாகும். சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் அவரை வரவேற்று தனி இரவு விருந்து அளித்தார்.

இதைத் தொடர்ந்து நேற்று இரு தலைவர்களும் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின் போது, ​​திருவள்ளுவர் பெயரில் முதல் சர்வதேச கலாச்சார மையம் சிங்கப்பூரில் திறந்து வைக்கப்படும் என்றும், அது மிக விரைவில் நிறுவப்படும் என்றும் நமது வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments