Tuesday, December 31, 2024
Homeவிளையாட்டுபயிற்சியில் இந்திய வீரர்கள்: சென்னை டெஸ்ட் போட்டிக்கு 'ரெடி'

பயிற்சியில் இந்திய வீரர்கள்: சென்னை டெஸ்ட் போட்டிக்கு ‘ரெடி’

சென்னை: சென்னை டெஸ்ட் போட்டிக்கு தயாராக இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியா வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்., 19ல் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் (செப். 27 – அக். 1) நடக்கிறது.

முதல் டெஸ்டில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் சென்னை வந்தனர். ஆரம்ப பயிற்சி தொடங்கியது. புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் மார்னே மார்கல் மற்றும் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் ஆகியோர் முன்னிலையில் அவர்கள் பயிற்சி பெற்றனர். முதலில் கம்பீர் அனைத்து வீரர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.

லண்டனில் இருந்து நேரடியாக சென்னை வந்த விராட் கோலி 45 நிமிடங்கள் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நீண்ட காலமாக பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.தமிழக சுழற்பந்து வீச்சாளர்கள் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோரும் பந்து வீசினர். கேப்டன் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ரிஷப் பந்த் உள்ளிட்ட வீரர்களும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர்.விக்கெட் கீப்பிங் குறித்து ராகுலுக்கு பயிற்சியாளர் கம்பீர் அறிவுரை வழங்கினார். இன்று மீண்டும் இந்திய வீரர்கள் பயிற்சியை தொடரவுள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments