புதுடில்லி:மத்திய அரசுக்கு, பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி., ஈவுத் தொகையாக 3,662 கோடி ரூபாயை வழங்கி உள்ளது.
எல்ஐசியின் மிகப்பெரிய பங்குதாரர் மத்திய அரசு. கடந்த நிதியாண்டில் பங்கு ஒன்றுக்கு ரூ.6 வீதம் ரூ.6,103 கோடி டிவிடெண்டாக செலுத்த வேண்டியிருந்தது.
கடந்த மார்ச் 1ம் தேதி, இடைக்கால ஈவுத்தொகையாக 2,441 கோடி ரூபாயை எல்.ஐ.சி., அரசு கருவூலத்தில் செலுத்தியது.
இதையடுத்து, எல்ஐசியின் முதன்மை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான சித்தர் மொகந்தி தலைமையிலான குழுவினர், இரண்டாம் தவணையாக ரூ.3,662 கோடிக்கான காசோலையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்கினர்.