புதுடில்லி:நிதிச் சேவை நிறுவனமான ‘ரெலிகேர் என்டர்பிரைசஸ்’ தலைவர் ராஷ்மி சலுஜா மற்றும் மூன்று அதிகாரிகளுக்கு தொடர்புடைய இடங்களில், அமலாக்கத் துறை சோதனை நடத்திஉள்ளது.
‘ரெலிகேர் பின்வெஸ்ட்’ நிதியை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட எஃப்ஐஆர் அடிப்படையில், சோதனையின் போது, ரஷ்மி சலுஜா மற்றும் பிறரின் டிமேட் தொடர்பான ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்குகள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால், சோதனையில் ஆவணங்களோ, மின்னணு பொருட்களோ பறிமுதல் செய்யப்படவில்லை என, நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுஉள்ளது.