Tuesday, December 31, 2024
Homeவர்த்தகம்செப்டம்பரில் சாதனை படைக்கும் ஐ.பி.ஓ., 14 ஆண்டுகளில் இல்லாத எண்ணிக்கை

செப்டம்பரில் சாதனை படைக்கும் ஐ.பி.ஓ., 14 ஆண்டுகளில் இல்லாத எண்ணிக்கை

மும்பை: கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத வகையில், நடப்பு செப்டம்பர் மாதத்தில், அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள், ஐபிஓ மூலம் நிதி திரட்ட வந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில், இதுவரை 28 நிறுவனங்கள் ஐபிஓவுக்கு வந்துள்ளன.

நாட்டின் பொருளாதாரம் குறித்து, ஆர்.பி.ஐ., துணை கவர்னர் மைக்கேல் தேபபிரதா பத்ரா தலைமையிலான குழு தயாரித்த செப்டம்பர் மாதத்துக்கான அறிக்கையை, ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது

நிதி சந்தைகள் விரைவான மாற்றங்களை சந்தித்து வருகின்றன. இதனால் நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டுக்கு வர அதிக ஆர்வம் காட்டுகின்றன. இதையடுத்து, பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான விண்ணப்பங்கள் பன்மடங்கு பெருகியுள்ளன.

ஐபிஓ வெளியீட்டில் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளில் 54 சதவீத பங்குகள் பட்டியலிடப்பட்ட ஒரு வாரத்தில் விற்கப்பட்டதாக செபியின் சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், உலகளவில் அதிக எண்ணிக்கையிலான ஐபிஓக்கள் கொண்ட நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளது. இதில், இந்தியாவின் பங்களிப்பு ஐபிஓ எண்ணிக்கையில் 27 சதவீதமாகவும், தொகை அடிப்படையில் 9 சதவீதமாகவும் உள்ளது.

செப்டம்பர் இரண்டாவது வாரத்தில், முதலீட்டாளர்களின் உற்சாகத்தை பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் பங்குகளுக்கான விண்ணப்பங்கள் வரவழைத்து, செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் அதன் IPO தொடங்கப்பட்டது.

கடந்த 14 ஆண்டுகளில், இந்த செப்டம்பர் மாதம், ஐபிஓக்களில் மிகவும் பரபரப்பான மாதமாக மாறியுள்ளது. பங்குச் சந்தைக்கு வரும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் மட்டும் ரூ.60,000 கோடிக்கு மேல் மூலதனத்தை நிறுவனங்கள் திரட்டியுள்ளன.

உலகளாவிய போக்கால், பங்குச் சந்தை சிறிய சரிவை சந்தித்தாலும், தொடர்ந்து உயர்வு கண்டு எழுச்சியுடன் காணப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments