வாஷிங்டன்: கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். தமிழகத்தில் தொழில் துவங்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
அமெரிக்காவில் உள்ள ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். X சமூக ஊடகத்தில் அவர் தனது பதிவில்.
ஆசியாவிலேயே தொழில் வளர்ச்சிக்கான மையமாக தமிழகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்ய அழைத்தேன். தமிழகத்தை பொருளாதார ரீதியாக வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளோம்.