Tuesday, December 31, 2024
Homeவிளையாட்டுடென்னிஸ்: ராஷ்மிகா வெற்றி

டென்னிஸ்: ராஷ்மிகா வெற்றி

மைசூர்: ஐடிஎப் மகளிர் டென்னிஸ் தொடர் இந்தியாவின் மைசூரில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், தொடரின் நம்பர்-1 வீராங்கனையான இந்தியாவின் ஸ்ரீவள்ளி ரஷ்மிகா, சக வீராங்கனை சோகா பாட்டீலை சந்தித்தார். ஒரு மணி நேரம் 18 நிமிடம் நீடித்த ஆட்ட முடிவில் ராஷ்மிகா 7-5, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஹுமைரா, 7-5, 6-4 என சக வீராங்கனை அமோதினியை வீழ்த்தி, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அகன்ஷா, சோகா ஜோடி, மற்றொரு இந்திய ஜோடியான அர்ஜன்-காஷ்வியை சந்தித்தது. இதில் அகன்ஷா, சோகா ஜோடி 6-0, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments