துபாய்: ”மூன்றுவித கிரிக்கெட்டிலும் கடந்த 6 ஆண்டுகளாக பும்ரா முத்திரை பதிக்கிறார்,”என பாண்டிங் தெரிவித்தார்.
30 வயதான பும்ரா, இந்திய அணியின் வேகப் புயல், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அசத்தினார். முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து விரைவில் குணமடைந்த அவர், சமீபத்தில் நடந்த ‘டி20’ உலக கோப்பை தொடரில் அச்சுறுத்தலாக இருந்தார். 15 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் கோப்பை கனவை நனவாக்கினார். தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பும்ரா காயம் அடைந்தபோது, பலர் கலக்கமடைந்தனர். அவரால் மீண்டும் சிறப்பாக செயல்பட முடியுமா என்று கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் வலுவாக திரும்பினார். பும்ராவின் பெயரைக் கேட்டாலே எதிரணி பேட்ஸ்மேன்கள் நடுங்குகிறார்கள்.
அவரது பந்துவீச்சை சமாளிப்பது கடினம் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்கள். அவரது பந்துகளில் ஒன்று ‘ஸ்விங்’ ஆனது. மற்றொரு பந்து வேகமான யார்க்கராக வருகிறது. ‘இன்-ஸ்விங்கர்’ பந்துவீசப் போகிறாரா அல்லது ‘அவுட்-ஸ்விங்கர்’ பந்துவீசப் போகிறாரா என்பதை கணிக்க முடியாமல் தவிக்கின்றனர்.