இந்தியாவின் போபண்ணா சர்வதேச டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றார்இந்தியாவின் போபண்ணா சர்வதேச டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றார்
பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் ஸ்ரீராம் பாலாஜி ஜோடி பிரான்ஸின் மான்ட்பைல்ஸ் மற்றும் ரோஜர்-வாசலின் ஜோடியை சந்தித்தது.
இதில் போபண்ணா, ஸ்ரீராம் ஜோடி 5-7, 2-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதையடுத்து, சர்வதேச டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக 44 வயதான போபண்ணா அறிவித்தார். 2003ல் சர்வதேச அரங்கில் அறிமுகமான போபண்ணா, சமீபத்தில் டேவிஸ் கோப்பையில் இருந்து ஓய்வு பெற்றார்.
அவர் கிராண்ட்ஸ்லாம் ஆண்கள் இரட்டையர் (2024) மற்றும் கலப்பு இரட்டையர் (2017) பட்டங்களை தலா ஒரு முறை வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு முறை (2018-இரட்டையர், 2022-கலப்பு இரட்டையர்) தங்கம் வென்றார். ரியோ ஒலிம்பிக்ஸ் (2016) கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா-சானியா 4வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டனர். போபண்ணாவுக்கு நாட்டின் உயரிய அர்ஜுனா (2019) மற்றும் பத்மஸ்ரீ (2024) விருதுகள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து போபண்ணா கூறுகையில், இது எனது கடைசி சர்வதேச போட்டி. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவுக்காக விளையாடியதை பெருமையாக உணர்கிறேன்,” என்றார்.