துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் கோலி 8வது இடத்துக்கு முன்னேறினார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) துபாயில் டெஸ்ட் அரங்கில் சிறந்த வீரர்களுக்கான தரவரிசையை வெளியிட்டது. பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் விராட் கோலி 737 புள்ளிகளுடன் 10வது இடத்தில் இருந்து 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய கேப்டன் ரோகித் சர்மா (751 புள்ளிகள்) 5-வது இடத்தில் இருந்து 6-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்திய இளம் வீராங்கனை யஷஷ்வி ஜெய்ஸ்வால் 740 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு முன்னேறினார்.
பாகிஸ்தானின் பாபர் ஆசம் (734), 3வது இடத்தில் இருந்து 9வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இங்கிலாந்தின் ஜோ ரூட் (881) ‘நம்பர்-1’ இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் (758), 4வது இடத்துக்கு முன்னேறினார்.
பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்திய வீரர் அஷ்வின் 870 புள்ளிகளுடன் ‘நம்பர்-1’ இடத்தை தக்கவைத்துக் கொண்டார். மற்ற இந்திய வீரர்கள் பும்ரா (847), ரவீந்திர ஜடேஜா (788) முறையே 2வது மற்றும் 7வது இடத்தில் நீடிக்கிறார்கள்.
‘ஆல்-ரவுண்டர்’ தரவரிசையில் இந்தியாவின் ஜடேஜா (444), அஷ்வின் (322) முதலிரண்டு இடங்களில் நீடிக்கின்றனர்.